RECENT NEWS

மஞ்சள் குலைக்கு விலை நிர்ணயம் செய்ய மஞ்சள்பட்டினம் விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இலங்கை பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இலங்கை பயணம்

Feb 09, 2023

2423

இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மைய திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளனர்.முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இந்த பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்

மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்

Aug 14, 2022

17764

மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் சரவணனிடம் கட்சி தொடர்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதையடுத்து நேற்றிரவு அமைச்சரை சரவணன் சந்தித்த நிலையில் இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

Apr 18, 2022

9658

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் சமபந்தி போஜனம் விழா சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பிரதமர் மோடி குறித்து ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதியுள்ள இளையராஜாவை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றார்..  

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Jul 08, 2021

7407

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தகவல், ஒலிபரப்பு, பால்வளம், கால்நடை மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் இணையமைச்சராக அவர் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் முருகனை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் தடையை மீறி வேல் யாத்திரை...தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்டோர் கைது

திருவண்ணாமலையில் தடையை மீறி வேல் யாத்திரை...தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்டோர் கைது

Nov 17, 2020

2084

திருவண்ணாமலையில், தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல முயன்ற, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக, திருவண்ணாமலையில், அண்ணா சிலை அருகே, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல, பாஜகவினர் முயன்றனர்.அப்போது, முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பேசிய முருகன், திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கிரிவலம் செல்ல தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

BIG STORIES

விக்கிரவாண்டி லியா மரணத்தில் திருப்பம்..
வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்..
செப்டிக் டேங்க் விபத்து நாடகமா? சிறுமியை கையில் தூக்கிச்சென்ற பள்ளி ஊழியர்?
ரிப்பன், உடையில் ரத்தக்கறை இருந்தது எப்படி?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News